அம்பரீஷ மன்னன் மகாவிஷ்ணுவின் பரமபதக் காட்சியை காண வேண்டி தவம் புரிந்தான். பகவான், பிரத்யும்னன், அநிருத்தன், பரவாசுதேவன், சங்கர்ஷணன் என்னும் நான்கு வடிவங்களில் மன்னனுக்குக் காட்சி தந்த தலம். கோயிலில் நுழைந்ததும் சிவன் சந்நிதி உள்ளது. அவருக்குப் பின்னே பெருமாள் சந்நிதி உள்ளது.
மூலவர் உய்யவந்த பெருமாள் என்ற திருநாமத்துடன் நின்ற திருக்கோலம், தெற்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். தாயார் வித்துவக்கோட்டுவல்லி, பத்மபாணி நாச்சியார் ஆகிய திருநாமங்களுடன் காட்சி அளிக்கின்றார். அம்பரீஷ மன்னனுக்கு பெருமாள் பிரத்யக்ஷம்.
பஞ்ச பாண்டவர்கள் தங்களது வனவாசக் காலத்தில் இங்கு வந்து பெருமாளை ஸேவித்தனர். கோயிலில் இருக்கும் மூர்த்திகளில் நடுவில் இருக்கும் மூர்த்தியை தர்மரும், மேற்கில் இருக்கும் மூர்த்தியை அர்ஜூனனும், இடப்புறம் இருக்கும் மூர்த்தியை பீமசேனனும், வலப்புறம் இருக்கும் மூர்த்தியை நகுல, சகாதேவனும் பூஜை செய்தனர்.
குலசேகராழ்வார் 10 பாசுரங்கள் பாடியுள்ளார். இக்கோயில் காலை 5 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|